Home / Technology / திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

திண்டிவனத்தில் 38வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொது மருத்துவம் மற்றும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் சென்னை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் விக்னேஷ், வினோதினி தலைமையிலான மருத்துவகுழுவினர் முகாமிற்கு கலந்து கொண்டு அனைவருக்கும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் பரிசோதனை இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து கண் சிகிச்சை முகாமில் இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. முகாமில் ஆட்டோ,கார்,பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பணியாளர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஊழியர்கள் என சுமார் 500கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tagged:

One Comment

  • Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Minima incidunt voluptates nemo, dolor optio quia architecto quis delectus perspiciatis. Nobis atque id hic neque possimus voluptatum voluptatibus tenetur, perspiciatis consequuntur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *