நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். ‘நிவேதனம்’ என்றால் ஸ்வாமியை சாப்பிடச்செய்வது என்று அர்த்தமே இல்லை.

அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை.

‘நிவேதயாமி’ என்றால் ‘அறிவிக்கிறேன்’ என்றுதான் அர்த்தமே தவிர, ‘உண்பிக்கிறேன்’ என்று அர்த்தமல்ல.

‘அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்’ என்று அவனுக்கு தெரிவித்துவிட்டு, அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும்.

– காஞ்சி மஹா ஸ்வாமிகள்
(தெய்வத்தின் குரல்)

Leave A Reply