Author: Nalla Seithi

பக்தர்களின் துயர் துடைத்த ஷீரடி மகான் சாய் பாபா பாரத தேசத்தில் தொடர்ந்து பல மகான்கள் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவின் ஷீரடி க்ஷேத்திரத்தில் பல ஆண்டுகள் உடலோடு நடமாடிய மகான் சாய் பாபா, உடலை துறந்த பிறகும் சமாதி நிலையில் இருந்து உலகெங்கும் உள்ள மக்களை இன்றும் நல்வழிப்படுத்தி வருகிறார். சின்னஞ்சிறு பாலகனாக ஷீரடி கிராமத்திற்கு வந்த சாய் பாபா, அங்குள்ள ஒரு வேப்ப மரத்தடியில் தியானம் செய்து வந்தார். அங்கு சில காலம் வாழ்ந்த அவர், ஷீரடியை விட்டு வெளியேறினார். பின் சில ஆண்டுகள் கழித்து வாலிப பருவத்தில் மீண்டும் ஷீரடிக்கு வந்த பாபா, தனது இறுதி மூச்சு வரை அங்கேயே தங்கியிருந்தார். நம் அனைவரையும் வழிநடத்துபவன் இறைவன் ஒருவனே, எல்லோருக்கும் முதலாளி அவன் ஒருவனே, நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் இறைவனிடம் வைக்கப்படும் நியாயமான கோரிக்கையை இறைவன் நிச்சயம் நிறவேற்றுவார். எல்லா உயிர்களிடத்தும் இறைவனை காண்பாய்,…

Read More

முருகா…. மாயோன் மருகா முக்கண்ணன் புதல்வா உமையாள் பாலா துதிக்கையோன் தம்பியே துதிப்பவர்க்கு துணை நீயே அகத்தில் உனை நினைத்தால் அகன்றிடும் துன்பமெல்லாம் ஆறுமுக சுவாமியாலே ஆற்றல் பெருகிடுமே இன்னல்கள் போக்கியே இன்பம் தருபவனே ஈரேழு புவனத்தில் ஈடில்லா இறைவன் நீ உனை நோக்கி துதித்தாலே ஊழ்வினைகள் களைந்திடுமே எல்லாம் வல்ல இறைவா நீ ஏழை என்னை காக்க ஓடி வா நீ ஐயம் களைந்து ஆறுதல் தந்திடுவாய் ஒப்பில்லா நாயகனை ஒருநாளும் மறவேனே ஓங்கார பொருள் நீயே ஓடி வந்து காத்திடுவாய் ஓளடதமாய் துணை நின்று உன்னத வாழ்வளிப்பாய் அஃறிணையாய் நானிருக்க அறிவொளி ஏற்றிடுவாய் உயர்திணையாய் எனை மாற்றி உயர்ந்ததோர் வாழ்வளிப்பாய் முருகா போற்றி ஸ்கந்தா போற்றி வடிவேல் அழகா வள்ளி மணாளா தெய்வானை கரம் பிடித்தாய் தேர்வர்க்கு அருள் புரிந்தாய் தேடி வந்த என்னையும் கரை தேர்த்தி விட்டிடப்பா பிறவிப் பெருங்கடலை கடக்கும் வழியின்றி பித்தனாய் திரியும் எனை…

Read More

நைவேத்தியம் செய்தால் ஸ்வாமி எங்கே சாப்பிடுகிறார் என்று சிலர் கேலியாகக் கேட்கிறார்கள். ‘நிவேதனம்’ என்றால் ஸ்வாமியை சாப்பிடச்செய்வது என்று அர்த்தமே இல்லை. அவருக்கு சாப்பிட்டு ஒன்றும் ஆக வேண்டாம். நம் நினைவை சுத்தமாக்கிக் கொள்ளத்தான் பூஜை முழுவதுமே தவிர, அவருக்கு இதனால் ஆவது எதுவுமில்லை. ‘நிவேதயாமி’ என்றால் ‘அறிவிக்கிறேன்’ என்றுதான் அர்த்தமே தவிர, ‘உண்பிக்கிறேன்’ என்று அர்த்தமல்ல. ‘அப்பனே இந்த வேளைக்கு உன் கருணையில் நீ இந்த அன்னத்தைக் கொடுத்திருக்கிறாய்’ என்று அவனுக்கு தெரிவித்துவிட்டு, அவனுடைய நினைவோடு உண்ண வேண்டும். – காஞ்சி மஹா ஸ்வாமிகள் (தெய்வத்தின் குரல்)

Read More

ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காக பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக்கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படி பல குடும்பங்களில் தினமும் போட்டு வைப்பதை பேட்டைக்கு பேட்டை சேகரித்து, சமைத்து ஆங்காங்கு உள்ள ஆலயத்தில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ஒரு பிடி அரிசியோடு ஒரு பைசாவும் தினந்தோறும் போட வேண்டும். சேகரித்த அரிசியை சமைப்பதற்காக விறகுக்கு, சாதத்தில் சேர்த்துக்கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிப்பதற்கு, சமையல் பாத்திர வாடகைக்கு – இப்படிப்பட்ட மேல் செலவுகளுக்குத்தான் அந்த பைசா. இத்திட்டத்தை நடத்திக்காட்டுவது பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு, ஈஸ்வரனின் கோவிலில் இப்படி பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும், மனசும் குளிரும். இதனாலாவது கோவிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு பக்தியும் வளரும். வெறுமே சாப்பாடு என்றில்லாமல், ஈஸ்வரனுக்கு நிவேதனமாக பிரசாதம் என்று இருப்பதால், அந்த அன்னம் சித்த சுத்தியும்…

Read More

மனிதனாக பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வது. ‘சேவை’ என்று தெரியாமலேயே அவரவரும் தமது குடும்பத்துக்காக சேவை செய்கிறோம். அதோடு நமக்கு சம்பந்தம் இல்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வதேசத்துக்கு நம்மால் முடிந்த சேவையைச் செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்யோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவை வேறா என எண்ணக்கூடாது. உலகத்துக்கு சேவை செய்வதாலேயே சொந்த கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட ‘அசலார் குழந்தைக்கு பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்த கஷ்டத்திலிருந்து கை தூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப, நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தை தீர்க்க நம்மாலானதை செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும். அதனால்…

Read More

‘இருட்டை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட, ஓர் விளக்கையாவது ஏற்றி வைப்பது மேலானது’ என நாங்கள் நம்புகிறோம். தீயவற்றைக் குறைப்பதை விட, நல்லவற்றை அதிகரிப்பது எளிமையானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. அதற்காகவே, ‘நல்ல செய்தி’ என்ற இணையதளத்தைத் துவங்கி உள்ளோம். ‘அல்லவை தேய அறம் பெருகும்’ என்கிறது திருக்குறள்.  ‘அறம் பெருகினால், அல்லவை தேயும்’ என நாங்கள் நம்புகிறோம். வாருங்கள்… அறத்தையும், அன்பையும் வளர்ப்போம்..!

Read More