ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காக பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக்கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும்.

இப்படி பல குடும்பங்களில் தினமும் போட்டு வைப்பதை பேட்டைக்கு பேட்டை சேகரித்து, சமைத்து ஆங்காங்கு உள்ள ஆலயத்தில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்.

ஒரு பிடி அரிசியோடு ஒரு பைசாவும் தினந்தோறும் போட வேண்டும். சேகரித்த அரிசியை சமைப்பதற்காக விறகுக்கு, சாதத்தில் சேர்த்துக்கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிப்பதற்கு, சமையல் பாத்திர வாடகைக்கு – இப்படிப்பட்ட மேல் செலவுகளுக்குத்தான் அந்த பைசா.

இத்திட்டத்தை நடத்திக்காட்டுவது பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு, ஈஸ்வரனின் கோவிலில் இப்படி பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும், மனசும் குளிரும்.

இதனாலாவது கோவிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு பக்தியும் வளரும். வெறுமே சாப்பாடு என்றில்லாமல், ஈஸ்வரனுக்கு நிவேதனமாக பிரசாதம் என்று இருப்பதால், அந்த அன்னம் சித்த சுத்தியும் அளிக்கும்.

– காஞ்சி மஹா ஸ்வாமிகள்
(தெய்வத்தின் குரல்)

Leave A Reply